மேலும் செய்திகள்
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் கிலி
2 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
2 hour(s) ago
கூவமூலாவில் சிறுத்தை உலா அச்சத்தில் பொதுமக்கள்
2 hour(s) ago
ரூ.18.50 லட்சம் மோசடி திருச்சூர் வாலிபர் கைது
2 hour(s) ago
குன்னுார்:குன்னூரில்,72 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக வழங்கும் கரும்பு கொண்டு வரப்பட்டு ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, கரும்புடன் 1000 ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. முதற்கட்டமாக ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.குன்னுார் தாலுகாவில் உள்ள, 72 ரேஷன் கடைகளில், உள்ள 45 ஆயிரத்து 768 கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய கரும்புகள் குன்னூருக்கு லாரிகளில் கொண்டு வரப்படுகிறது.முதற்கட்டமாக,16 டன் கொண்ட கரும்புகள் குன்னூர் கொண்டுவரப்பட்டது. ரயில்வே இடத்தில் சரிபார்க்கப்பட்டு அங்கிருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்ப லாரிகளில் மாற்றி கொண்டு செல்லப்பட்டது. 20 கரும்புகள் ஒரு கட்டாக கட்டி 350 கட்டு கரும்புகள் கொண்டு வரப்பட்டது. லாரிகள் மூலம் கரும்புகள் கொண்டுவரப்பட்டு அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணிகளை குன்னூர் வட்ட வழங்கல் அலுவலர் வசந்தகுமார், குன்னூர் கூட்டுறவு சார் பதிவாளர் பிரதீப் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago