உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா ? உடனடி பரிசோதனை அவசியம்

காய்ச்சல் அறிகுறி தென்படுகிறதா ? உடனடி பரிசோதனை அவசியம்

ஊட்டி:-காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும். என, மருத்துவ துறை தெரிவித்துள்ளது.நீலகிரியில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது கடும் மேகமூட்டம், நீர் பனி, உறை பனி, மழை, திடீரென வெயில் தென்படுவது, கடும் குளிர் என, காலநிலை மாற்றத்தால் உடல் ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள், பெரியவர்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்துள்ளனர். மாவட்டத்தில், 6 தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மருத்துவ துறை அதிகாரிகள் கூறுகையில், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை உட்பட தாலுக்கா வாரியாக அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் நோய் தடுப்பு குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக, குழந்தைகளை காய்ச்சல் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக பார்த்து கொள்ள வேண்டும். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை