உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வறட்சியால் ரோஜா சாகுபடி பாதிப்பு விலையும் சரிவால் விவசாயிகள் கவலை

வறட்சியால் ரோஜா சாகுபடி பாதிப்பு விலையும் சரிவால் விவசாயிகள் கவலை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுப்புற பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி, 2,500 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து, சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற ரோஜாக்களை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர்.கடந்த காலங்களில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஏற்றுமதியான ரோஜாக்கள், படிப்படியாக குறைந்து, நடப்பாண்டு காதலர் தினத்திற்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோஜாக்கள் மட்டுமே ஏற்றுமதியானது.ஓசூர் ரோஜாக்கள் இடத்தை, கென்யா, எத்தியோப்பியா மற்றும் சீன மலர்கள் பிடித்துள்ளன. அதனால், ஆண்டுதோறும் ரோஜா ஏற்றுமதி குறைந்து வருகிறது.இந்நிலையில், கடும் வறட்சியால் போர்வெல்கள் வறண்டு, போதிய நீரின்றி சாகுபடி பாதித்துள்ளது. உள்ளூர் சந்தைகளில், 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா, 40 முதல், 50 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. உற்பத்தி செலவே, 90 ரூபாய் வரை ஆகிறது. இது, விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.பசுமை குடில்களுக்குள் காலை நேரங்களில், 15 முதல், 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இருக்க வேண்டும். ஆனால், 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இதனால், ரோஜாக்களின் நோய் தாக்கம் அதிகரித்து, செடிகள் பாதிக்கின்றன.இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எதிர்காலத்தில் ரோஜா பயிரிடுவதை கைவிடலாமா என்றும் யோசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி