| ADDED : ஜன 26, 2024 12:34 AM
பந்தலுார், ஜன. 26-பந்தலுார் பஜார் மற்றும் அரசு மேல்நிலை பள்ளியை ஒட்டி பத்தாம் நம்பர் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது.இதன் சுற்று வட்டார பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ள நிலையில், அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு, கிராமத்திற்கு மூன்று- யானைகள் விசிட் செய்து உள்ளன.தகவல் அறிந்த வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் துரத்தினர். இதனால் குடியிருப்புகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.இதேபோல, அத்திக்குன்னா கே.கே., நகர் பகுதிக்கு வந்த ஒற்றை யானை, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இந்த பகுதிகளில் தேவாலா வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்