உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மலைபாதையில் வாகன விபத்து ஐந்து பேர் காயம்: விசாரணை

 மலைபாதையில் வாகன விபத்து ஐந்து பேர் காயம்: விசாரணை

குன்னுார்: குன்னுார் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் காயமடைந்தனர். சென்னையில் இருந்து, ஊட்டிக்கு சுற்றுலா வாகனத்தில், 3 பெண்கள் உட்பட, 15 பேர் சுற்றுலா வந்தனர். ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட்டு, சென்னை திரும்பி கொண்டு இருந்தனர். மதியம், 2:00 மணி அளவில் குன்னுார் மலைபாதையில் மரப்பாலம், 13வது கொண்டை ஊசி வளைவு அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் மோகன் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்