உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  காட்டில் தவித்த புலி குட்டிகள் தாயுடன் சேர்த்த வனத்துறை

 காட்டில் தவித்த புலி குட்டிகள் தாயுடன் சேர்த்த வனத்துறை

கூடலுார்: கர்நாடக மாநிலம் நாகர்ேஹாலோ புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள, உன்சூர் விவசாய தோட்டத்தில், தனியாக தவித்த நான்கு புலி குட்டிகளை, கர்நாடகா வனத்துறையினர் மீட்டு, மைசூரு வனவிலங்கு மீட்பு மையத்தில் உள்ள தாயுடன் சேர்த்தனர். கர்நாடக மாநிலம், நாகர்ஹோலோ புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள, உன்சூர் தாலுகா கவுடனகட்டே ஒட்டிய குடியிருப்பு பகுதியில் உலா வந்த, 10 வயது பெண் புலி மக்களை அச்சுறுத்தி வந்தது. தொடர்ந்து, கடந்த, 28ம் தேதி புலியை பிடித்து, மைசூரு அருகே, கூர்கஹல்லியில் உள்ள வனவிலங்கு மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் சேர்த்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், அதன் குட்டிகள் அப்பகுதியில் சுற்றி வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கர்நாடகா வனத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து, அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாள் முயற்சிக்கு பின், அப்பகுதியில் பதுங்கி இருந்த, 4 புலி குட்டிகளை பாதுகாப்பாக மீட்டனர். அவைகளை, மைசூரு வனவிலங்குகள் மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தில் உள்ள அதன் தாயுடன் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை