மேலும் செய்திகள்
கள்ள ஓட்டு போடுவதை நியாயப்படுத்தலாமா?
31-Oct-2025
பாலக்காடு: பாலக்காட்டில் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம் அரசு தான் என, கேரள அரிசி ஆலைகள் சங்க தலைவர் தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் நிருபர்களிடம், கேரள அரிசி ஆலைகள் சங்க மாநில தலைவர் கர்ணன் கூறியதாவது: நெல் கொள்முதல் பிரச்னையில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு பிறகும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைத்தால் மட்டுமே நெல்லை எடுத்து கொள்வோம் என, அரிசி ஆலைகளின் அடம் பிடிப்பு தான், நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் என்று உணவு துறை அமைச்சர் அனில் கூறுவது தவறு. சமீபத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில், அரிசி ஆலைகளுக்கு வழங்க வேண்டிய ரூ.83.37 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், அதற்கு பின், இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தான் நெல் கொள்முதல் செய்வதில் தாமதத்திற்கு காரணம். இது தொடர்பாக அரசு ஆலோசித்து துரிதமாக நடவடிக்கை எடுத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, கூறினார்.
31-Oct-2025