உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நலம் காக்கும் மருத்துவ முகாம் 2,875 பேருக்கு பரிசோதனை

 நலம் காக்கும் மருத்துவ முகாம் 2,875 பேருக்கு பரிசோதனை

பந்தலூர்: பந்தலூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில், 2,875 பேர் பங்கேற்று பயனடைந்தனர். தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் எனும் தலைப்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் தலைமை வகித்து, தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில், உடல் நலனைக் காக்க மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பொது மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளும் முறைகள் குறித்து விளக்கி பேசினார். முகாமில், 20 பிரிவுகளின் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கி தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறப்பு பிரிவு டாக்டர்கள் 16 பேர் உள்ளிட்ட 100 டாக்டர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். முகாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2,875 பேர் பங்கேற்று பயனடைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ