மேலும் செய்திகள்
தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கம்
3 minutes ago
அணைகள் நீர்மட்டம்
4 minutes ago
மா.கம்யூ., பிரமுகர் துாக்கிட்டு தற்கொலை
6 minutes ago
வீட்டிலேயே நகைகளை வைத்து திருட்டு போனதாக புகார்
7 minutes ago
பந்தலுார்: 'சுகாதாரமாக வாழ்ந்தால், நலமான வாழ்வு வாழ முடியும்,' என, அறிவுறுத்தப்பட்டது. தேயிலை வாரியம் சார்பில், 'ஸ்வாச்சதா பக்கவாடா' எனும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதில், கூடலுார், பந்தலுார் மற்றும் வயநாடு பகுதிகளில், அரசு பள்ளிகள், தேயிலை தோட்டங்கள், மருத்துவமனைகள், விவசாய குடியிருப்பு பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் இறுதி நிகழ்ச்சி பந்தலுார் அருகே தேவாலா ரவுஸ்டன் மலை தோட்டத்தில் நடத்தப்பட்டது. எஸ்டேட் பொது மேலாளர் கிருஷ்ணசந்திரன் தலைமை வகித்தார். தேயிலை வாரிய அலுவலர் வருண் மேனோன் பேசுகையில், ''ஒவ்வொரு தனி மனிதனும் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். பொது இடங்களில் குப்பை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசி எறிவதால், மண்ணின் இயற்கை தன்மைபாதிக்கப்பட்டு, விவசாயம் பாதிக்கப்படும். அதேபோல், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய் தொற்றுகள் பரவி, அனைத்து உயிர்களும் பாதிக்கப்படும் என்பதால், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் கருத்துக்களை உள்வாங்கி, பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புறங்களை துாய்மையாகவும், இயற்கையை பாதுகாக்கும் வகையில் பசுமையை அதிகரிக்கவும் முன்வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, தொழிலாளர் குடியிருப்பு பகுதிகள், நடைபாதைகள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் துாய்மைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டதுடன், இயற்கையை பாதுகாக்க உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்டேட் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள், தேயிலை வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர். தேயிலை வாரிய அலுவலர் அஞ்சலி நன்றி கூறினார்.
3 minutes ago
4 minutes ago
6 minutes ago
7 minutes ago