மேலும் செய்திகள்
ரேஷன் கடை கட்டுமான பணி தரமில்லாமல் இருப்பதாக புகார்
2 minutes ago
குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா
2 minutes ago
தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
3 minutes ago
கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான காலியிடத்தை சமன் செய்தால், பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு நகராட்சிக்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, 'பார்க்கிங்' வசதி மிகவும் குறைவு. இதனால், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக, வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு, வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில், போலீசார் அவ்வப்போது அபராதம் விதிப்பது தொடர்கிறது. இதனை தடுக்க, நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சில இடங்கள் செடிகள் முளைத்து பயனற்று கிடக்கின்றன. இந்த வகையான இடங்களை அதிகாரிகள் கண்டறிந்து சமன் செய்து தளம் அமைக்கும் பட்சத்தில், அதிக எண்ணிக்கையில் வாகனங்களை நிறுத்த முடியும். இதனால் போக்குவரத்து நெரிசலும், அபராதம் விதிப்பதும் வெகுவாக குறையும். குறிப்பாக, நகராட்சி அலுவலகம் இடதுபுறத்தில், நெடுஞ்சாலையை ஒட்டி, வீணாக விடப்பட்டுள்ள இடத்தை சமன் செய்யும் பட்சத்தில், 20க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்த முடியும். எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 minutes ago
2 minutes ago
3 minutes ago