மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர் பணிக்கான தேர்வு
1 hour(s) ago
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
1 hour(s) ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
2 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
2 hour(s) ago
குன்னுார்: குன்னுாரில் ரயில் இன்ஜின்களை பராமரிக்கும் போது, உதிரி பாகங்களை துாக்கி செல்ல பயன்படும், நுாற்றாண்டு பழமையான கிரேன் மற்றும் டிராலி இன்றும் பயன்படுத்தி வருவது மலை ரயிலுக்கு பெருமை அளிப்பதாக உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த, யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில், பயணம் செய்ய சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.அதில், சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'எக்ஸ்' கிளாஸ் இன்ஜின்கள் நுாற்றாண்டை கடந்தும் இங்கு மட்டுமே இயக்கப்படுகிறது. நிலக்கரியால் இயங்கிய இன்ஜின்கள், தற்போது 'பர்னஸ் ஆயில்' இன்ஜின்களாக மாற்றபட்டு இயக்கப்பட்டு வருகிறது.இந்த இன்ஜின்கள் பராமரிக்க நுாற்றாண்டு பழமை வாய்ந்த கிரேன்கள் தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'மேன்பவர்' மூலம், 4 திசைகளிலும் சுழற்றி பயன்படுத்தும் கிரேன் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.அதில், நான்கு பேர் இயக்கும் வகையிலான கிரேன் மூலம், 15 டன் வரையிலான இன்ஜினில் உள்ள 'வாட்டர் டாங்க், இன்ஜின்' கழற்றி கீழே இறக்கி வைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல பணிமனைக்குள், 8 பேர் இயக்கும், 30 டன் அளவிலான கிரேன் தனியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இன்ஜின் பராமரிப்பு மற்றும் பெட்டிகளில் இருந்து சக்கரம் கழற்றி பராமரிக்க சமீபத்தில், மின்சாரத்தில் இயங்க கூடிய, 10 டன் கொண்ட 'ஜிப் கிரேன்' பணிமனையில் துவக்கி வைத்து பயன் படுத்தப்பட்டபோதும், பழமையான கிரேன்கள் நுாற்றாண்டுகளை கடந்தும் தற்போதும் எந்தவித பாதிப்புமின்றி பயன்படுத்துவது மலை ரயிலுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. டிராலி பயன்பாடு
இதே போல, நுாற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் டிராலி, இன்றும் குன்னுார் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படுகிறது.'பிரேக் பிடிப்பான் மற்றும் 4 இரும்பு சக்கரங்கள், பலகையிலான இருக்கைகள்,' என, வடிவமைத்துள்ள இந்த டிராலியில் அலுவலர்கள், ஊழியர்கள், 5 பேர் வரை அமர்ந்து தாழ்வான மலை ரயில் பாதையில் செல்கின்றனர். 30 நிமிடங்களில் கல்லாறு வரை செல்கிறது. தொடர்ந்து, அங்கிருந்து வாகனங்கள் அல்லது ரயிலில் ஏற்றி மீண்டும் குன்னுார் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களில் உள்ள பாதிப்புகளை அறிந்து சரிசெய்யப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வந்தபோதும் பழமையை பாதிப்பில்லாமல் தற்போதும் பயன்படுத்தி வருவது மலை ரயிலுக்கு மணிமகுடமாக உள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago