உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இந்திரா பிறந்த நாள் விழா: நிர்வாகிகள் பங்கேற்பு

 இந்திரா பிறந்த நாள் விழா: நிர்வாகிகள் பங்கேற்பு

கோத்தகிரி: கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில், காங்., சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோத்தகிரி வட்டார தலைவர் சில்லபாபு தலைமை வகித்தார். முன்னாள் வட்டார தலைவர்கள் பில்லன், கமலா சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திரா படத்திற்கு மாலை அணிவித்து, பூஜை செய்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இந்திரா பிரதமராக இருந்தபோது, மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து நினைவு கூறப்பட்டது. தவிர, கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதில், கட்சி நிர்வாகிகள் லியாகத் அலி, கேசவன், பெள்ளி, சண்முகம் முபாரக் மற்றும் பசுவராஜ் உட்பட காங்., மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். கட்சி நிர்வாகி மணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை, வட்டார காங்., கட்சியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்