உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடை வெயிலில் தாக்கம்: பழரசம் தயாரிப்பு பணி துவக்கம்

கோடை வெயிலில் தாக்கம்: பழரசம் தயாரிப்பு பணி துவக்கம்

குன்னுார்;கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தேவைக்காக, குன்னுார் பழவியல் நிலையத்தில், ஒரு டன் ஆரஞ்ச் பழங்களால் பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழவியல் நிலையத்தில், பழரசம், ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகிறது. 'பேரி, திராட்சை, ஆரஞ்சு பைன் ஆப்பிள், ஸ்ட்ராபெரி, பேஷன் புரூட்,' போன்றவற்றில் பழரசம் மற்றும் ஜாதிக்காய், எலுமிச்சை உள்ளிட்டவைகளில் ஊறுகாய் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டு தோறும், 15 டன் அளவிற்கு ஜாம், ஊறுகாய், பழரசம் ஆகியவை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வரும் ஏப்., மே கோடை சீசனில் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக, தற்போது ஒரு டன் ஆரஞ்ச் பழங்கள் வரவழைக்கப்பட்டு பழரசம் தயாரிக்கும் பணி துவங்கியது. 700 மில்லி லிட்டர் கொண்ட ஆரஞ்ச், திராட்சை, பைன் ஆப்பிள் பழரசம் ஆகியவை, 170 ரூபாய்க்கும் பேஷன் புரூட், 180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த பழரசம், சிம்ஸ் பூங்கா, காட்டேரி, ரோஜா பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட தோட்டக்கலை துறைக்கு சொந்தமான கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்