மேலும் செய்திகள்
பா.ஜ., பட்டியல் அணி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
1 minutes ago
தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
23 hour(s) ago
ஊட்டி: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்குமார், கோட்ட தலைவர் அலோசியஸ் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'நில அளவை பணியாளர்ளின் பணிசுமையை போக்க வேண்டும். பணிகளை முறைப்படுத்த வேண்டும். ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். குறுவட்டம், நகர சார் ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என்றனர். மாவட்டத்தில் உள்ள, 6 தாலுகாக்களை சேர்ந்த, 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். முடிவில், மாவட்ட பொருளாளர் பைரன் நன்றி கூறினார்.
1 minutes ago
23 hour(s) ago