உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / லோக்சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் துவக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

லோக்சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் துவக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஊட்டி;லோக்சபா தேர்தலை ஒட்டி வேட்பு மனு தாக்கல் இன்று. 20ம் தொடங்குகிறது; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்., 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இன்று, 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய வரும், 27ம் தேதி கடைசி நாளாகும் 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை திரும்ப பெற, 30ம் தேதி கடைசி நாளாகும். ஜூன், 4ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பதால், கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் உட்பட கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும், 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு முழு பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக சுற்றுவட்டார பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களுடன் நான்கு பேர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடத்திலிருந்து, 100 மீ., துாரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படுவர். வாகனங்களும், 100 மீ., துாரத்துக்கு முன்னதாகவே நிறுத்தப்படும். இதுவரை ஒரு சுயேச்சை உட்பட இரண்டு பேர் மட்டுமே வேட்பு மனு வாங்கி சென்று உள்ளனர். முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காததால் அவர்கள் யாரும் வேட்பு மனுக்களை நாளை ( இன்று) தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை . வேட்பு மனு தாக்கல் செய்ய காலை, 11:00 மணி முதல் மதியம், 3.00 மணி வரை அனுமதிக்கப்படும்,' என்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி