| ADDED : பிப் 20, 2024 10:40 PM
ஊட்டி;கோத்தகிரியில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், இன்று கலெக்டரின் ஆய்வு நடக்கிறதுதமிழக அரசு மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண, 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட உயர்நிலை அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்கின்றனர்.மக்களின் குறைகளை கேட்டு அரசின் அனைத்து நலத்திட்டங்ஙளும் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, இன்று காலை, 9:00 மணியளவில் கோத்தகிரி வட்டத்தில் ஆய்வு செய்து, மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது.எனவே, அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை உரிய அலுவலர்களிடம் நேரில் அளித்து அல்லது தாலுகா அலுவலகத்தில் கலெக்டரிடம் நேரில் அளித்து பயன் பெறலாம்.