உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் நேபாளம் பெண் தொழிலாளி படுகாயம்

 கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் நேபாளம் பெண் தொழிலாளி படுகாயம்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் நேபாளம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலாளி படுகாயம் அடைந்தார். நீலகிரி வன கோட்டம், கோத்தகிரி வனச்சரகம், குஞ்சப்பனை பிரிவிற்கு உட்பட்ட, மேல் தட்டப்பள்ளம் ஓமக்குழி பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வருபவர், பகவத்சிங் என்பவரது மனைவி தேவி, 60. இவர், வழக்கம் போல் நேற்று காலை, பசுந் தேயிலை பறிப்பதற்காக, தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தேயிலை செடி மறைவில் பதுங்கி இருந்த கரடி, திடீரென வெளியேறி தேவியை தாக்கி உள்ளது. இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்ட அவர், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தகவல் அறிந்த கோத்தகிரி ரேஞ்சர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் தேவிக்கு ஆறுதல் கூறினர். 'மருத்துவ செலவிற்காக, இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதியளித்தனர். மேலும், தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ள கரடியை வனப்பகுதிக்கு விரட்ட, வனத் துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை