உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சொந்த ஊருக்கு செல்ல முடிவு : ஆயத்தமாகும் வடமாநில தொழிலாளர்கள்

சொந்த ஊருக்கு செல்ல முடிவு : ஆயத்தமாகும் வடமாநில தொழிலாளர்கள்

பந்தலுார்;பந்தலுார் அருகே மேங்கோரஞ்ச் பகுதியில் கடந்த, 6ம் தேதி வடமாநில தொழிலாளியின் குழந்தை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தது. அதனை தொடர்ந்து சிறுத்தையை வனக்குழுவினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் இணைந்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிறுத்தை பிடித்த பகுதியை ஒட்டிய தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை நடமாடி உள்ளது. வெளியே குழந்தையுடன் நின்றிருந்த வட மாநில தொழிலாளர்கள் வீட்டிற்குள் ஓடி தப்பித்தனர்.சிறுத்தை நடமாட்டத்தால், நேற்று காலை வட மாநில தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. அந்த பகுதியில் வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வன குழுவினர் ஆய்வு செய்ததுடன், 'குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்; தொழிலாளர்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும்,' என, அறிவுறுத்தினர்.தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அரசியல் கட்சியினர் அந்த பகுதிக்கு சென்று, 'வட மாநில தொழிலாளர்களுக்கு அனைத்து வித பாதுகாப்பும் வழங்கப்படும்,' என, தெரிவித்தனர்.அப்போது, தொழிலாளர்கள் கூறகையில், 'எஸ்டேட் நிர்வாகம் காலை, 6:00 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என மிரட்டுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால், நாங்கள் சம்பளம் மற்றும் பண பலன்களை பெற்று கொண்டு சொந்த ஊருக்கு செல்ல உள்ளோம்,' என, கூறினர். இதனால், அப்பகுதியில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

ரூ. 15 லட்சம் நிதியுதவி...

பந்தலுார் அருகே ஏலமன்னா பகுதியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பழங்குடியின பெண் சரிதா குடும்பத்திற்கு ஏற்கனவே வனத்துறை சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வனத்துறையினர் குடும்பத்தாரிடம் வழங்கினர்.அதேபோல், ஜார்கண்ட் மாநில தொழிலாளி சிவசங்கர் கிர்வார் என்பவரின், 3 வயது குழந்தை பலியான நிலையில், அவரது குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதல் கட்டமாக, 50 ஆயிரம் ரூபாய்; முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ