மேலும் செய்திகள்
வெடிபொருள் பறிமுதல்: பாலக்காட்டில் இருவர் கைது
10 minutes ago
ஆபத்தான மரங்கள்: அகற்றினால் அச்சமில்லை
12 minutes ago
அணைகள் நீர்மட்டம்
14 minutes ago
கூடலுார்: கூடலுார்- கோழிக்கோடு சாலையோரத்தில் இருப்பு வைத்துள்ள பழைய இரும்பு பொருட்களால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கூடலுார் கோழிக்கோடு சாலையில், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதனால், வாகன நெரிசல் தொடர்ச்சியாக இருக்கும். இந்நிலையில், துப்பு குட்டிபேட்டை முதல் நந்தட்டி வரை சாலையோரங்களில், பயனற்ற பழைய வாகனங்கள் நிறுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பழைய வாகனங்களை தொடர்ந்து, சாலையோரங்களை பழைய இரும்பு பொருட்கள் இருப்பு வைக்கும் இடமாக மாற்றி வருகின்றனர். சிலர்,வாகன போக்குவரத்துக்கு இடையூறாக, சாலையில் வாகனங்களை நிறுத்தி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுகின்றனர். இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஓட்டுனர்கள் கூறுகையில்,'கோழிக்கோடு சாலை அதிக வாகன போக்குவரத்து நிறைந்த வழித்தடமாகும். இச்சாலையில், துப்பு குட்டிபேட்டை முதல் நந்தட்டி வரை சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள பயனற்ற பழைய வாகனங்கள், பழைய இரும்பு பொருட்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. இதனால், வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய இரும்பு பொருட்களை அகற்றி, சாலையோரங்களை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
10 minutes ago
12 minutes ago
14 minutes ago