| ADDED : மார் 20, 2024 09:44 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே யானை தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.பந்தலுார் அருகே மூச்சுக்குன்னு பகுதியை சேர்ந்தவர் அனிபா,55. இவர் தேவாலா பஜாரில் பழக்கடை வைத்துள்ளார். நேற்று காலை வீட்டின் அருகே தோட்டத்தில் பணி செய்வதற்காக சென்று உள்ளார். மதியம் வரை வீடு திரும்பாத நிலையில் வீட்டில் இருந்தவர்கள், தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அனிபா யானைத்தாக்கி உயிரிழந்த நிலையில் கிடந்ததும் தெரிய வந்தது.தகவல் அறிந்த வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன் இறந்தவரின் உடலை மீட்டு, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 9.5 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. தொடர்ந்து, வனத்துறையினர் தேயிலை தோட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ள, யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நோன்பு சமயத்தில் ஒருவர் யானைத் தாக்கி உயிரிழந்தது தேவாலா சுற்றுவட்டார பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.