உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை பகுதி ரயில் நிலையங்கள் விற்பனை அங்காடிகள் திறப்பு

மலை பகுதி ரயில் நிலையங்கள் விற்பனை அங்காடிகள் திறப்பு

குன்னுார்:ஊட்டி, குன்னுார், ஹில்குரோவ் ரயில் நிலைங்களில், 'ஒன் ஸ்டேஷன்; ஒன் புராடெக்ட்' விற்பனை அங்காடிகள் திறக்கப்பட்டன.நாடு முழுவதும் பாரத பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதத்தின் ஒரு பகுதியாக, 2,700 ரயில் நிலையங்கள்; ரயில்வே துறையில், 85 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், மேம்படுத்தும் திட்டங்களை, நேற்று காணொளி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக, ஊட்டி, குன்னுார், ஹில்குரோவ் ரயில் நிலைங்களில் திறக்கப்பட்ட, 'ஒன் ஸ்டேஷன்; ஒன் புராடெக்ட்' விற்பனை அங்காடிகளையும் காணொளி மூலம் திறந்து வைத்தார்.இதற்கான விழா, குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் நடந்தது. அதன் கல்வெட்டை ஸ்டேஷன் மாஸ்டர் கோபி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு, குன்னுார் டவுன் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமை வகித்தார்.பா.ஜ., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், ''உள்ளூரில் தயாரிக்கும் வர்க்கி, டீ துாள், சாக்லேட் உள்ளிட்டவை ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்வதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்,'' என்றார். துணைத் தலைவர் பாப்பண்ணன் , மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சரவணன், தனியார் மருத்துவமனை நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி, டீ டிரேடர்ஸ் அசோசியேஷன் நிர்வாகி பீஷ்மா ராவ் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை