உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை: இரவில் நடமாட மக்கள் அச்சம்

குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தை: இரவில் நடமாட மக்கள் அச்சம்

குன்னுார்;குன்னுார் இளித்தொரை, பெட்டட்டி பகுதியில் குட்டிகளுடன் உலா வரும் சிறுத்தைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குன்னுார் இளித்தொரை, பெட்டட்டி, இந்திரா நகர் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் இரு குட்டிகளுடன் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.அவ்வப்போது குடியிருப்புகளில் உள்ள வளர்ப்பு நாய்கள், பூனைகளை வேட்டையாடி செல்கிறது.இப்பகுதியை சேர்ந்த இளையராஜா கூறுகையில், ''இளித்தொரை இந்திரா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரு குட்டிகளுடன், 4 சிறுத்தைகள் உள்ளன. இரவு நேரத்தில் மட்டுமே வந்த சிறுத்தைகள் மாலை, அதிகாலை நேரத்திலும் வர துவங்கியுள்ளது. குறிப்பாக, மாலை 6:00 மணிக்கு மேல் அவ்வப்போது குட்டிகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கிறது. இங்குள்ள, 20 ஏக்கர் பரப்பளவில் புதர்கள் சூழ்ந்துள்ளதால், அப்பகுதியில் விலங்குகள் தஞ்சம் அடைந்துள்ளன. அரசு துறை அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் தீர்வு காணப்படாமல் உள்ளது. பாதிப்புகள் ஏற்படும் முன் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.வனத்துறையினர் கூறுகையில், ' அப்பகுதியில் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிறுத்தை நடமாட்டம் உள்ள நேரத்தில் மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி