உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாயை கவ்வி சென்ற சிறுத்தை ;மக்கள் வெளியே நடமாட அச்சம்

நாயை கவ்வி சென்ற சிறுத்தை ;மக்கள் வெளியே நடமாட அச்சம்

குன்னுார்;குன்னுார் இளித்தொரை இந்திரா நகரில், இரவில் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்றதால் மக்கள் அச்சமடைந்துஉள்ளனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை குன்னுார் இளித்தொரை இந்திரா நகருக்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்றது. இது அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அப்பகுதியை சேர்ந்த இளையராஜா கூறுகையில், ''இளித்தொரை மற்றும் இந்திரா நகர் இடையே, 20 ஏக்கர் பரப்பளவில் புதர்கள் சூழ்ந்த இடத்தில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்கு தஞ்சம் அடைந்துள்ள சிறுத்தை அவ்வப்போது இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து நாய்கள் மற்றும் பூனைகளை கவ்வி செல்கிறது. இது குறித்து ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டங்களில் இரு முறை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால், மாலை, இரவு நேரங்களில் யாரும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டப்பட்டு வன துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ