உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தெருவிளக்கு அமைப்பதில் அதிருப்தி போராட்டத்தில் ஈடுபட மக்கள் முடிவு

தெருவிளக்கு அமைப்பதில் அதிருப்தி போராட்டத்தில் ஈடுபட மக்கள் முடிவு

பந்தலுார்:சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி கண்ணம் வயல் விளையாட்டு மைதானம் அருகில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருகில் தேயிலை தோட்டம் மற்றும் வனப்பகுதி உள்ளதால், பகல் நேரங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இப்பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.அப்பகுதியில், இரவு நேரங்களில் வனவிலங்குகளின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், இருளில், ஒரு கி.மீ., துாரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகளாக, தெரு விளக்கு அமைத்து தர வலியுறுத்திய நிலையில், ஊராட்சி சார்பில் , தெருவிளக்கு அமைப்பதற்கான தொகையினை சேரம்பாடி மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி உள்ளனர்.தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு அளவீடு செய்தனர்.தற்போது, புதிய மின் கம்பம் அமைக்கும் பணி தொடங்கிய நிலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்காமல், மின்வாரிய அதிகாரிகள் தங்கள் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப மின் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பிரச்னை குறித்து, கிராம மக்கள் மின்வாரிய அதிகாரியிடம் பல முறை புகார் கூறியும் தீர்வு கிடைக்கவில்லை.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் மக்கள் பயன்படும்படியான பணிகளை மேற்கொள்ளாத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து வரும், 18ம் தேதி, சேரம்பாடி உதவி மின் பொறியாளர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் மனு அனுப்பி உள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை