உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுமி பாலியல் சம்பவம் கடும் நடவடிக்கை தேவை; குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு

சிறுமி பாலியல் சம்பவம் கடும் நடவடிக்கை தேவை; குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு

ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். அதில், பொதுமக்கள், பொதுநல அமைப்பினர் சார்பில், குமார் தலைமையில் அளித்த மனு:ஊட்டி அருகே, 9 வயது சிறுமியை அஜித்குமார் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே அவர் மற்றொரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கைது செய்யப்பட்டு சிறை சென்று வெளியில் வந்துள்ளார். அவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் இதேபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார். எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனிமேல் இது போன்ற சம்பவங்களை தடுக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, மின்சாரம், குடிநீர் இணைப்பு, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். ஒரே நாளில், 185 மனுக்கள் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை