உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாக்காளர்களின் எண்ணிக்கை ஓட்டு சாவடி வாரியாக ஆய்வு

வாக்காளர்களின் எண்ணிக்கை ஓட்டு சாவடி வாரியாக ஆய்வு

சூலுார்;1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டு சாவடிகள் குறித்து அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர்.லோக்சபா தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், தேர்தல் பிரிவு அதிகாரிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். சூலுார் சட்டசபை தொகுதியில், கடந்த சட்டசபை பொது தேர்தலில், 324 ஓட்டு சாவடிகள் இருந்தன. வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை, 329 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு ஓட்டு சாவடிக்கு, ஆயிரத்து, 500 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிறப்பு முகாம்கள், ஆன் லைன் மூலம் புதிய வாக்காளர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதனால், சில ஓட்டு சாவடிகளில், ஆயிரத்து, 500க்கும் மேல் வாக்காளர்கள் உள்ள நிலை உருவாகியுள்ளது. இதனால், அந்த ஓட்டு சாவடிகளை கணக்கெடுக்கும் பணியில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சேகர் கூறுகையில், ''அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து பேசி, கூடுதலாக உள்ள வாக்காளர்கள் அருகில் உள்ள ஓட்டு சாவடிக்கு மாற்றம் செய்யப்படுவர். ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை