உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பொங்கல் சிறப்பு தொகுப்பு; எம்.பி., துவக்கி வைத்தார்

பொங்கல் சிறப்பு தொகுப்பு; எம்.பி., துவக்கி வைத்தார்

ஊட்டி : தமிழக அரசு, பொங்கல் பரிசாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன், 1,000 ரூபாய் ரொக்கம் பரிசு வழங்குகிறது.ஊட்டி இந்து நகர் ரேஷன் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை எம்.பி., ராஜா துவக்கி வைத்து கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில், ஆறு வட்டங்களில், 404 ரேஷன் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள, 2 லட்சத்து, 18 ஆயிரத்து, 798 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம், 6.45 லட்சம் பேர் பயன் பெறுவர். பொங்கலுக்கு முன்னதாக, இன்று (10ம் தேதி) மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும், ஒரு கோடியே, 15 லட்சம் மகளிரின் வங்கி கணக்குகளுக்கு, 1,000 ரூபாய் அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்,'' என்றார்.கலெக்டர் அருணா முன்னிலை வைத்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பு பதிவாளர் வாஞ்சிநாதன், ஊட்டி நகர் மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி