உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஊட்டியில் பெண் இன்ஸ்பெக்டர் மொபைல் போனுக்கு ஆபாச வீடியோ: எஸ்.பி., அலுவலக உதவியாளர் கைது

 ஊட்டியில் பெண் இன்ஸ்பெக்டர் மொபைல் போனுக்கு ஆபாச வீடியோ: எஸ்.பி., அலுவலக உதவியாளர் கைது

ஊட்டி: நீலகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்த முருகன்,45, உதவியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அங்கு போலீசாருக்கு பயணப்படிக்கான ரசீது ஒதுக்கி பணம் கொடுத்தல் உட்பட பல்வேறு வகையான எழுத்து பணிகளை செய்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் வெளி மாவட்டத்திற்கு சென்று வந்த செலவு விவரங்களுக்கான தொகையை தர வலியுறுத்தி, பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் இவரிடம் விண்ணப்பத்துடன் ரசீதுகளை கொடுத்தார். அதில், அந்த இன்ஸ்பெக்டரின் தொடர்பு எண்ணையும் அவர் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து, இன்ஸ்பெக்டரின் தொடர்பு எண்ணை குறித்து கொண்ட முருகன், பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண் இன்ஸ்பெக்டரின் 'வாட்ஸ்-அப்'க்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். புதிய எண்ணாக இருந்ததால் இன்ஸ்பெக்டர் எந்த பதிலும் கொடுக்காமல் விட்டுவிட்டார். அடுத்த ஒரு சில வாரங்களில் பெண் இன்ஸ்பெக்டரின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு மீண்டும் முருகன் ஆபாச படங்கள், வீடியோக்களை அனுப்பியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் இன்ஸ்பெக்டர் இது குறித்து, ஊட்டி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேஸ், எஸ்.ஐ., சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசார் கூறுகையில்,'பெண் இன்ஸ்பெக்டருக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை அனுப்பியதால் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை