உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறையில் இருந்து தப்பிய கைதி கைது

சிறையில் இருந்து தப்பிய கைதி கைது

கூடலுார்:கோவை மத்திய சிறையில் இருந்து தப்பிய கைதியை, கூடலுாரில் போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலுாரை சேர்ந்தவர் விஜயரத்தினம்,27. இவர், 2017ல் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக, அனைத்து மகளிர் ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக, ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், குற்றவாளி விஜயரத்தினத்துக்கு, 4 ஆண்டுகளுக்கு முன், 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த அக்., 29ம் தேதி சிறையில் இருந்து தப்பினார். கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.தப்பிய கைதி, கூடலுாரில் பதுங்கி சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து, கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, எஸ்.எஸ்.ஐ., இப்ராஹிம் மற்றும் போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.நேற்று முன்தினம், இரவு, 10:00 மணிக்கு அவர் முல்லை நகர் பகுதியில் இருப்பதை அறிந்த இரண்டு போலீசார் அவரை பிடித்தனர். அப்போது, அவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளார் அதில், தலைமை காவலர் முத்துமுருகன் காயமடைந்தார்.தகவல் அறிந்து வந்த போலீசார், விஜயரத்தினத்தை மீண்டும் தேடிப்பிடித்து கைது செய்தனர். அப்போது, விஜயரத்தினம் தப்பி ஓடியபோது கிழே விழுந்ததில் இடது கால் உடைந்தது. சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டார். நியூஹோப் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைதி தாக்கியதில் காயம் அடைந்த முத்துமுருகன் சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை