உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை எதிர்த்து மறியல் போராட்டம்

 தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை எதிர்த்து மறியல் போராட்டம்

ஊட்டி: ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மறியலில் ஈடுபட்ட, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு, ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, நான்கு தொகுப்பு சட்டங்களை அறிவித்துள்ளது. 'இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., சார்பில், மாநில தழுவிய மறியல் போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக, ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் நடந்த போராட்டத்தை, சி.ஐ.டி.யூ., மாநில குழு உறுப்பினர் குமார் துவக்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் முன்னிலை வகித்தார். சி.பி.எம்., மாவட்ட செயலாளர் பாஸ்கரன் பேசினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் வினோத் கண்டன உரை வாசித்தார். 30 பேர் கைது செய்யப்பட்டனர். * பந்தலுாரில் நடந்த போராட்டத்தில் நிர்வாகி கவுன்சிலர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வர்கீஸ் துவக்கி வைத்து பேசினார். 29 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை