மேலும் செய்திகள்
ஊட்டியில் வக்கீல்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
29-Apr-2025
ஊட்டி, ; கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க கோரி, ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில், 'நீலகிரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்,' சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில்,' கட்டுமான தொழிலை சீரழிக்கும் வகையில் கல் குவாரி உரிமையாளர்கள் விலையேற்றி உள்ள, 'எம். சாண்ட் , பி .சாண்ட் விலை உயர்வை குறைக்க வேண்டும். தரமான கல்குவாரி பொருட்களை நியாயமான விலையில் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நீலகிரி மாவட்ட கட்டட பொறியாளர் சங்க தலைவர் திலக் குமார், நிர்வாகிகள் பத்மநாபன் விஜயகாந்த், முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
29-Apr-2025