மேலும் செய்திகள்
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை எதிர்த்து மறியல் போராட்டம்
40 minutes ago
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
41 minutes ago
சூலுார் : தேர்தலில், 100 சதவீத ஓட்டளிப்பதை வலியுறுத்தி, மகளிர் திட்ட உறுப்பினர்கள், சூலுாரில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திட்ட இயக்குனர் சந்திரா அறிவுறுத்தலின் பேரில், சூலுார் வட்டாரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சூலுார் யூனியன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச் சியில், 100 சதவீதம் ஓட்டளிக்க அனைவரும் உறுதி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசி, கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் அறிவழகன், வட்டார இயக்க மேலாளர் அபிநயா, ஒருங்கிணைப்பாளர் வீரகாந்தா, சாரதா, செண்பகம், சர்மிளா மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடந்தது. ஓட்டளிப்பது உரிமை மட்டுமல்ல, கடமையும் ஆகும். 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் வலிமை பெறும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேட்டுப்பாளையம்-லோக்சபா தேர்தலை ஒட்டி அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுத்தும் வகையில், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், கையெழுத்து உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நகராட்சி அதிகாரிகள் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகளிடம் ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி அனைவரும் வாக்களிப்போம், என உறுதி மொழி ஏற்க வைத்தனர். இதனையடுத்து பஸ் ஸ்டாண்டில் வைக்க பட்டிருந்த கையெழுத்து பலகையில் அனைவரும் கையெழுத்திட்டனர். மேலும் செல்பி பூத் ஒன்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது.--
40 minutes ago
41 minutes ago