உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பலாத்கார குற்றவாளிக்கு 26 மாத சிறை

 பலாத்கார குற்றவாளிக்கு 26 மாத சிறை

பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு, 26 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி புதுக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நிஜாமுதீன், 28. இவர், கடந்த, 2024 நவ,, 24ம் தேதி 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வடக்கஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து நிஜாமுதீனை கைது செய்தனர். இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பித்த நிலையில், ஆலத்தூர் விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சந்தோஷ், குற்றவாளிக்கு, 26 மாத சிறை தண்டனையும், 22 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிதது தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீலாக பிந்து ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை