உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளத்தில் கவிழ்ந்த கார் கிரேன் மூலம் மீட்பு

பள்ளத்தில் கவிழ்ந்த கார் கிரேன் மூலம் மீட்பு

ஊட்டி: ஊட்டி அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.ஊட்டி - லவ்டேல் இடையே காந்திநகர் பகுதி உள்ளது. நேற்று லவ்டேல் நோக்கி சென்று கொண்டிருந்த கார், காந்திநகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லவ்டேல் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பள்ளத்தில் கவிழ்ந்த கார் இன்று கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ