மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
ஊட்டி;''சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், போலீசார் தெரிவிக்கும் அனைத்து விதிகளை கடைப்பிடித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என, எஸ்.பி., அறிவுறுத்தினார். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் போலீசார் சார்பில், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கும் சுற்றுலா பயணிகளிடம் பெற வேண்டிய விவரங்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது தொடர்பான அறிவுரை வழங்கும் கூட்டம் நடந்தது. எஸ்.பி.சுந்தரவடிவேல் பேசியதாவது: நீலகிரிக்கு ஆண்டுதோறும், 30 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க அதற்கான வசதிகளை நாம் செய்து கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். தங்கும் விடுதிகளுக்கு வருபவர்களின் விபரங்களை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். சி.சி.டி.வி., கேமரா கட்டாயம். அதிலும், வெளிபுறத்தில் சாலை மார்க்கமாக தெரியும் வகையில் அமைக்க வேண்டும். முக்கியமாக நகரில் பார்க்கிங் பிரச்னை உள்ளது. வியாபார நோக்கில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் தங்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அலட்சியம் காட்டினால் வேறு வழியின்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். அந்த நிலைக்கு போலீசாரை நிர்பந்திக்க வேண்டாம். சிலர் வழிமுறைகளை தெரிந்தும் பலர் கடைப்பிடிப்பதில்லை. தங்கும் விடுதிகளில் விதிமீறல்கள் நடப்பதாக தகவல் வந்து உறுதிப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் தெரிவிக்கும் அனைத்து விதிகளை கடைப்பிடித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில் பங்கேற்ற தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் சிலர் பேசுகையில், 'நீலகிரி சுற்றுலாவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. போலீசார் தெரிவித்த விதிமுறைகள் தெளிவில்லாமல் உள்ளது. தொடர்பு கொண்டு கேட்டால், உரிய பதில் கிடைப்பதில்லை. அரசின் உத்தரவுகள் தெளிவாக தெரிவித்தால் நாங்களும் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம்,' என்றார்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025