மேலும் செய்திகள்
ரேஷன் கடை கட்டுமான பணி தரமில்லாமல் இருப்பதாக புகார்
5 minutes ago
குடியிருப்பு பகுதியில் காட்டெருமை உலா
5 minutes ago
தனியார் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்
6 minutes ago
குன்னுார்: குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், 'சஹானா' இசை உறவுகள் அமைப்பு, இசை பயிற்சி மையம், கல்லுாரி அறக்கட்டளை சார்பில், தென் மாநில அளவில் மூத்த குடிமக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ராஜேஷ் பங்கேற்றார். போட்டியாளர்கள், ராமசாமி, ஜெஸ்ஸி, பிரியாமதி, ஜாஸ்மின், மாலதி, தேவசேனா, மனோகரி, பாஸ்கரன், லதா, மதன், விழிச்சுடர், ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நடுவர்களாக, குன்னுார் தேவ் நாட்டியாலயா இயக்குனர் காயத்ரி புண்ணியமூர்த்தி, ஹைதராபாத் இசை வல்லுநர்கள் ஸ்ரீதர், பழனிச்சாமி பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தனிமையில் வாழ்ந்து வரும் பல மூத்த குடிமக்கள், பழைய கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில், பழைய பாடல்கள் பாடியும், பழைய விளையாட்டுக்கள் விளையாடியும் மகிழ்ந்தனர். குன்னுார் கிளிஞ்சாடாவை சேர்ந்த ஸ்டேன்ஸ் பள்ளி மாணவி மயூரியின் புல்லாங்குழல் இசை, விசில் சப்தத்தில் பாடிய பழைய பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது. 'டேப் நாட்டியாலயா' குழுவின் அருணியா, அனாமிகா, தரிஷியா, ஸ்ரீநிஷா ஆகியோரின் பரதநாட்டியம் இடம்பெற்றது. குன்னுார் இசை பயிற்சி மைய தலைவர் பேராசிரியர் தொள்ளன் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''மூத்த குடிமக்கள் 'ஸ்டார் மேக்கர்' இணையதளம் வாயிலாக ஒன்று சேர்ந்து பல்வேறு பாட்டுகள் பாடி மகிழ்ந்து வருகின்றனர். தற்போதைய வாழ்க்கை முறையில் சவாலாக உள்ள சமூக தனிமை, தனிமை உணர்வு, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், தமிழகம், கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது,''என்றார். ஏற்பாடுகளை, பிராவிடன்ஸ் கல்லுாரி அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர் ஹேமா ஸ்ரீகுமார், சஹானா இசை உறவுகள் அமைப்பு தலைவி வனிதா உட்பட பலர் செய்திருந்தனர்.
5 minutes ago
5 minutes ago
6 minutes ago