மேலும் செய்திகள்
பகவதி அம்மன் ஆறாட்டு மகோற்சவம் 30ல் துவக்கம்
21 minutes ago
பிரசவத்தின் போது குழந்தை இறப்பு
21 minutes ago
23 சவரன் நகை திருட்டு
22 minutes ago
பந்தலுார்: நெல்லியாளம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் அறையில், பதுங்கிய பாம்பு மீட்கப்பட்டது. பந்தலுார் நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மயானத்தை ஒட்டி அமைந்துள்ள அலுவலகத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தலைவர் அறையில் பதுங்கிய கட்டுவிரியன் பாம்பு மீட்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் அறையில், ஒரு பாம்பு பதுங்கியது. அதனைப் பார்த்து அலுவலக ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலின் பேரில், வேட்டை தடுப்பு காவலர் கூத்தையன் தலைமையிலான குழுவினர், அலுவலகத்திற்கு வந்து அறையில் பதுங்கிய கட்டுவிரியன் பாம்பை மீட்டனர். மீட்கப்பட்ட பாம்பு கிளன்ராக் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்திற்கு, அடிக்கடி பாம்புகள் வருவது, அலுவலக பணியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
21 minutes ago
21 minutes ago
22 minutes ago