மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவில் வருடாந்திர திருவிழா
2 minutes ago
கணக்கெடுப்பில் தென்பட்ட அரியவகை பறவைகள்
3 minutes ago
காட்டு யானையால் வாழை மரங்கள் சேதம்
3 minutes ago
நடுரோட்டில் சண்டையிட்ட இரு சிறுத்தைகள்
3 minutes ago
பாலக்காடு: இந்திய இசையில், ஆன்மிக இசை பலரின் மனதைக் கவரும், என, பிரபல கஜல் பாடகர் அஷ்ரப் ஹைட்ரோஸ் தெரிவித்தார். கேரள மாநிலம், பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், கலை அமைப்பான ஸ்வரலயா சார்பில், வரும், 31ம் தேதி வரை நடன சங்கீத உற்சவம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வந்த பிரபல கஜல் பாடகர் அஷ்ரப் ஹைட்ரோஸ் நிருபர்களிடம் கூறியதாவது: பரந்த நோக்கம் உள்ள இசையை பல்வேறு வகைகளில் இணைத்து வழங்க முடியும். இந்திய இசையில், ஆன்மிக இசை பலரின் மனதைக் கவரும். மேற்கத்திய இசைக்கருவிகளை இணைத்து, அதன் பாரம்பரியத்தைப் பேணுவதன் வாயிலாக கஜல் பாடல்களை முடிந்தவரை சுவாரஸ்யமாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். பிரபல ஷெஹனாய் கலை ஞர் ஷைலேஷ் பகவத் கூறுகையில், ''அனைத்து இசைக்கருவிகளுக்கும் தனித்துவமான அம்சங்கள் உள்ளது. 'ஜுகல்பந்தி' என்பது இசைக்கருவிகளுக்கு இடையிலான போட்டி அல்ல. கண்களின் மொழி வாயிலாக ஒருவரையொருவர் புரிந்துகொண்டு 'ஜுகல்பந்தி' இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன,'' என்றார். பிரபல இசைக்கலைஞர் மற்றும் சித்தார் கலைஞர் ரபீக் கான் கூறுகையில், ''ஒருவரை யொருவர் அறிந்து கொண்டு நிகழ்த்தும் கச்சேரி 'ஜுகல்பந்தி'. இதை வண்ண பூக்கள் நிறைந்த அழகான பூங்கொத்துக்கு ஒப்பிடலாம்,'' என்றார்.
2 minutes ago
3 minutes ago
3 minutes ago
3 minutes ago