மாநிலங்கள் மற்றும் தலைநகர் 37 நொடியில் ஒப்புவிக்கும் சிறுவன்; உலக சாதனையாளர் போட்டியில் சாதனை
பந்தலுார் : பந்தலுாரை சேர்ந்த முதல் வகுப்பு மாணவன், நாட்டின் மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களை, 37 நொடியில் கூறி சாதனை படைத்துள்ளார்.பந்தலுார் அருகே நெல்லியாளம் கிராமத்தை ஆனந்தராஜ் -பிரியங்கா தம்பதியின் மகன் சஞ்சீவராஜ். இவர் உப்பட்டியில் செயல்படும் பாரதமாதா மேல்நிலை பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.இந்த பள்ளியில், தாளாளர் பாதர்ஜார்ஜ், முதல்வர் பிஜூ தலைமையில், வகுப்பாசிரியர் கோகிலா ஆகியோர் நாட்டின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் குறித்து மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளனர். அதில், ஆறு வயது மாணவர் சஞ்சீவராஜ், 37 நொடியில் நாட்டின் மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களை கூறியுள்ளார். சென்னையில் நடந்த போட்டியில் பங்கேற்று, தனது திறமையை வெளிப்படுத்தினார்.இதை தொடர்ந்து, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றது. மாணவருக்கு, ஆசிரியர்கள், சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.