உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தமிழக-கேரள வன எல்லை பகுதி: வனத்துறை கூட்டு கண்காணிப்பு

தமிழக-கேரள வன எல்லை பகுதி: வனத்துறை கூட்டு கண்காணிப்பு

கூடலூர்;ஊட்டி, முக்கூர்த்தி தேசிய பூங்காவில், தமிழக-கேரள எல்லையில், தமிழக-கேரள வனத்துறையினர் கூட்டாக கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.ஊட்டி, முக்கூர்த்தி தேசிய பூங்கா, தமிழக- கேரள எல்லையான, கேரள மாநிலம் சைலன்ட் வேலி தேசிய பூங்கா ஒட்டி அமைந்துள்ளது.இப்பகுதியின் வன பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக-கேரள வனத்துறையினர் இணைந்து அவ்வப்போது கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, சைலன்ட் வேலி தேசிய பூங்கா வன உயிரின காப்பாளர் வினோத் தலைமையில், முக்கூர்த்தி வனச்சரகர் யுவராஜ், சைலன் வேலி வனச்சரகர் பிரசாத், பாவனி வனச்சரகர் கணேசன் மற்றும் வன ஊழியர்கள் கூட்டாக நேற்று முதல், மாநில எல்லையில் முகாமிட்டு கண்காணிப்பு பணியை துவக்கினர்.வனத்துறையினர் கூறுகையில், 'கண்காணிப்பில் வெளிநபர்கள் உள்ளே வந்து சென்றதற்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை, கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம். இப்பணிகள் சில நாட்கள் தொடர்ந்து நடைபெறும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி