| ADDED : டிச 10, 2025 08:10 AM
கூடலுார்: கூடலுார் ஸ்ரீமதுரை பகுதியில் சேதமடைந்துள்ள, புத்துார்வயல்- கம்மாத்தி சாலையை சீரமைக்க வலியுறுத்தியுள்ளனர். கூடலுார் மண்வயல் சாலையில் கம்மாத்தி சந்திப்ப பகுதியில் இருந்து, புத்துார்வயல் இணைப்பு சாலை பிரிந்து செல்கிறது. 1.5 கி.மீ., துாரமுள்ள இச்சாலை புத்துார்வயல், கூடலுாருக்கு மாற்று சாலையாகவும் உள்ளது. புத்துார்வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இச்சாலை வழியாக குங்கூர்மூலா ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்ட இச்சாலை, தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே,சேதமடைந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.