| ADDED : பிப் 16, 2024 12:22 AM
ஊட்டி:ஊட்டியில் உள்ள கிரசன்ட் பள்ளி நிர்வாகம் அமைந்து தந்த நிழல்குடையை கலெக்டர் திறந்து வைத்தார். ஊட்டி நொண்டிமேடு பகுதியில், நிழல்குடை வசதி இல்லாததால் வெயில், மழையில் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கிரசன்ட் பள்ளி நிர்வாகம், நிழல் குடை அமைத்து கொடுக்க முன்வந்தது. பின், நகராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, நிழல் குடை அமைக்கப்பட்டது.நேற்று நடந்த விழாவில், கலெக்டர் அருணா பங்கேற்று நிழல் குடையை திறந்து வைத்து பள்ளி நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில்,''இந்த நிழல்குடையால், மழை காலங்களில் மக்கள் பெரும் பயனடைவர். இதே போல், நகரின் முக்கிய இடங்களில் நிழல்குடைகளை கட்டி தர பள்ளி நிர்வாகம் முன் வர வேண்டும்,'' என்றார். நகராட்சி கமிஷனர் ஏகராஜ், கிரசன்ட் பள்ளி தாளாளர் உமர்பாரூக் உட்பட பலர் பங்கேற்றனர்.