உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காருக்கு வந்த சோதனை: ‛கூகுள் மேப்பால் ‛அப்பப்பா...

காருக்கு வந்த சோதனை: ‛கூகுள் மேப்பால் ‛அப்பப்பா...

கூடலுார்: கூடலுாரில், 'கூகுள் மேப்' காட்டிய வழியை நம்பி சென்ற சுற்றுலா வாகன டிரைவருக்கு, நடைபாதையில் கார் இயக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த ஐந்து பேர் நேற்று முன்தினம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள இடங்களுக்கு சென்றுவிட்டு, மாலை கர்நாடகா செல்வதற்காக, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, கூடலுார் நோக்கி வந்தனர்.

மாற்று வழி

இச்சாலையில், போக்குவரத்து நெருக்கடி காரணமாக, மாற்று வழியை தேடி செல்லலாம் என, 'கூகுள் மேப்' பயன்படுத்தி, புதிய வழியில் டிரைவர் காரை ஓட்டி வந்துஉள்ளார்.மாலையில், மேல் கூடலுார் பகுதி தலைமை தபால் நிலையம் அருகே பயணித்த போது, கார் சென்ற சிமென்ட் சாலையில் படிகள் இருந்ததை பார்த்து டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பின், சுதாரித்து காரை பாதி படி இறங்கிய நிலையில், 'பிரேக்' போட்டு நிறுத்தினார்.இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, காரில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் காரை சாலைக்கு கொண்டு வர உதவினர்.

நடவடிக்கை

தொடர்ந்து காரில் வந்தவர்கள் கர்நாடகா நோக்கி சென்றனர்.சுற்றுலா பயணியர் கூறுகையில், 'நீலகிரி சுற்றுலா தலமாக உள்ளதால், கூகுள் மேப்பில் உள்ள தவறுகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை