உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரயில் பாதையோரம் பரவிய தீ அணைத்த தீயணைப்பு துறையினர்

ரயில் பாதையோரம் பரவிய தீ அணைத்த தீயணைப்பு துறையினர்

குன்னுார்;குன்னுார் வெலிங்டன் மலை ரயில் பாதையோர கற்பூர மர காட்டில் தீ பிடித்தது.குன்னுார் வெலிங்டன் அண்ணா நகர் அருகே, மலை ரயில் பாதையோரம் கற்பூர மரங்கள் சூழ்த்த இடத்தில் காட்டு தீ ஏற்பட்டதுதகவலின் பேரில், குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் உத்தரவின் பேரில், முன்னணி தீயணைப்பாளர்கள் சுப்ரமணி, முரளி உட்பட தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.தீயணைப்பு வாகனம் கொண்டு சென்று தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலையில், செடிகளாலும், மண் கொட்டியும் ஒரு நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. ரயில் பாதையில் அதிகளவில் இலைகள் உதிர்ந்து கிடந்த நிலையில், உடனடியாக சென்று தீ அணைக்கப்பட்டதால் ரயில்பாதையில் பரவாமல் தடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை