உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சமூக நீதிக்கான விருது விண்ணப்பம் சமர்ப்பிக்க 18ம் தேதி கடைசி நாள்

 சமூக நீதிக்கான விருது விண்ணப்பம் சமர்ப்பிக்க 18ம் தேதி கடைசி நாள்

ஊட்டி: சமூக நீதிக்கான விருது விண்ணப்பம், 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான பெரியார் விருது, 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு, 5 லட்சம் ரூபாய் தொகையுடன், ஒரு சவரன் தங்க பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருது, முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறது. நடப்பாண்டு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களது விண்ணப்பம், தங்களின் சுய விபரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து, 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை