| ADDED : ஜன 18, 2024 02:50 AM
கூடலுார் : கூடலுார் மண்வயல் கம்மாத்தி பகுதியில், தனியார் எஸ்டேட்டில், நேற்று மாலை, 3:00 மணிக்கு தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்து சிறுத்தை அவர்களை விரட்டியது. அவர்கள் அலறி அடித்து ஓடி தப்பினர். தகவல் அறிந்து வந்த மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, தேயிலை தோட்டத்தில் சிறுத்தை செல்வதை பார்த்தனர்; பட்டாசு வெடித்து அதனை விரட்டினர். தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் தொழிலாளர்களை விரட்டிய சிறுத்தை, கால்நடைகள் மற்றும் மக்களை தாக்கும் ஆபத்து உள்ளது என்றனர்.