உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குமர முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

குமர முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்

கூடலுார்: கூடலுார் குசுமகிரி ஸ்ரீ குமரமுருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 7:30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. 8:00 மணிக்கு பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. பகல், 12:30 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. தேர் ஊர்வலத்தை, கூடலுார் ஆர்.டி.ஓ., முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி., செல்வராஜ், தாசில்தார் ராஜேஸ்வரி துவக்கி வைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.ஊர்வலம், பழைய கோர்ட் சாலை, ஊட்டி மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக மேல் கூடலுார் மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், சக்தி முனீஸ்வரன், பட்டத்துளசி அம்மன் கோவில் சென்று இரவு கோவிலை வந்தடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை