உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முள்ளி, கோபனாரி சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்க திட்டம்

முள்ளி, கோபனாரி சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்க திட்டம்

மேட்டுப்பாளையம்;நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதை அடுத்து காரமடை அருகே உள்ள கேரளா மாநில எல்லை பகுதிகளான முள்ளி, கோபனாரி செக்போஸ்ட்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.கேரளா மாநிலம் வயநாடு, கண்ணுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா மாநிலம் வயநாடு, கண்ணுார் பகுதிகளில் போலீசாருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் சில மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டனர். சிலர் காட்டுக்குள் தப்பி சென்றனர். கேரளா வனப்பகுதியில் உள்ள மாவோயிஸ்ட்டுகள், மாநில எல்லையோரங்களில் உள்ள வனப்பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள கேரள மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.இதன் ஒருபகுதியாக காரமடை அருகே கேரளா மாநில எல்லை பகுதியான முள்ளி மற்றும் கோபனாரி வனப்பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் வனப்பகுதியில் பதுங்கியுள்ளனரா, நடமாட்டம் உள்ளதா என தீவிரமாக தேடுதல் வேட்டைகளை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளது. மாவோயிஸ்ட்களால் தேர்தல் சமயத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க போலீசார் முன்கூட்டிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக முள்ளி, கோபனாரி செக்போஸ்ட்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''முள்ளி, கோபனாரி செக்போஸ்ட்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள அத்திக்கடவு, பில்லுார், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதுார், காலன்புதுார், செங்குட்டை, குட்டை புதுார், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தேர்தல் நேரம் நெருங்குவதால் கண்காணிப்பை மேலும் பலப்படுத்தும் விதமாக, முள்ளி மற்றும் கோபனாரியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். முள்ளியில் வனத்துறையினர், போலீசார் இணைந்து செயல்படும் விதமாக ஒருங்கிணைந்த செக்போஸ்ட் அமைக்கும் பணி, விரைவில் தொடங்கப்படும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை