உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / படகு இல்லத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணி

படகு இல்லத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணி

ஊட்டி: 'ஊட்டியில் படகு இல்லத்தில் நடக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவு பெறும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டி படகு இல்லம் பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 36.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட நவீன கழிவறையை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''சுற்றுலா நகரமான நீலகிரிக்கு, ஆண்டுதோறும் வெளிமாநில மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து, சுற்றுலா மையங்களை கண்டுகளித்து செல்கின்றனர்.அவர்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு, ஊட்டி படகு இல்லத்தில், 36.50 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கழிவறை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில், சாய்வுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு, 5 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,''என்றார்.இதில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஷ்வரன், படகு இல்ல மேலாளர் சாம்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை