உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொட்டபெட்டா ஜங்ஷனில் தொடரும் வாகன நெரிசல்

தொட்டபெட்டா ஜங்ஷனில் தொடரும் வாகன நெரிசல்

ஊட்டி:ஊட்டி தொட்டபெட்டா ஜங்ஷனில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதால், மக்கள் பாதிக்கப்படுகிறனர்.ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தொட்டபெட்டா இயற்கை அழகை காண செல்கின்றனர். தொட்டபெட்டா ஜங்ஷனில், நான்கு ரோடுகள் பிரிகின்றன.ஊட்டியில் இருந்து, தொட்டபெட்டாவுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள், 'ரவுண்டானாவை' கடந்து செல்லும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஊட்டி-கோத்தகிரி மற்றும் ஊட்டி-கெந்தொரை இடையே செல்லும் அரசு பஸ்கள் உட்பட இதர வாகனங்கள் அணிவகுத்து சாலையில் நின்றுவிடுவதால், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.மேலும், தொட்டபெட்டா செல்லும் சுற்றுலா வாகனங்கள் நுழைவு கட்டணம் பெறும் இடத்தில், ஒரு வாகனத்திற்கு குறைந்தது, ஒரு நிமிடம் நேரம் தேவை படுவதால், தும்மனட்டி பிரிவு வரை சுற்றுலா வாகனங்கள் சென்று போது, கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், அலுவலகம் மற்றும் அவசர தேவைக்கு வரும் பயணிகள், குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, தொட்டபெட்டா ஜங்ஷனில், கூடுதல் போலீசாரை பணியமர்த்தி, போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை